ஞாயிறு, 13 ஜூலை, 2014

நமதூர் (மேலத்தெரு) மையத்தாங்கொள்ளை வாயிலில் நயவஞ்சகமாகவும், தான்தோன்றிதனமாகவும் வைக்கப்பட்டிருக்கம் கல்வெட்டின் வாசகங்களை வன்மையாக கண்டிக்கிறேன். இதனை எதிர்த்து கேட்காத கையாலாகாதவர்களை நினைத்து வேதனையடைகிறேன். 
வல்ல அல்லாஹ் இவர்களுக்கு ஹிதாயத் வழங்கட்டும் அல்லது அவனது சாபம் உண்டாகட்டும். ஆமீன்.

வியாழன், 10 ஜூலை, 2014

KEIA இப்தார் 2014

அன்பார்ந்த KEIA உறுப்பினர்களே! அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்...)

நமது கொடிக்கால்பாளையம் எமிரேட்ஸ் இஸ்லாமிக் அசோஸியேஷன் சார்பாக நாளை (வெள்ளிக்கிழமை 11-7-2014) நோன்பு திறப்பு (இப்தார்) ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதால்,  உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இடம்: கராச்சி தர்பார் உணவகம், அல் மக்தூம் ஆஸ்பத்திரி அருகில், துபாய்.
பார்கிங் வசதி உண்டு.

-KEIA